வயலின்
இசைக்கருவிகளில் நரம்புக்கருவி வகையைச் சார்ந்தது வயலின் ஆகும். இக் கருவியை ஆதி காலத்தில் “பிடில்” எனவும் அழைத்தனர். இற்றைக்கு 300 ஆண்டுகளிற்கு முன் ஐரோப்பிய நாட்டில் இக் கருவி உருவாக்கப்பட்டாலும், வில் போட்டு வாசிக்கும் தற்கால வயலின் முதன் முதலில் இந்தியாவில் தான் உருவாக்கப்பட்டது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இவ் வாத்தியம் கச்சேரிகளில் பிரதான வாத்தியமாகவும், பக்க வாத்தியமாகவும் பயன்படுகிறது. இக்கருவியை “சீர்யாழ்” எனவும் அழைப்பர். இதிலுள்ள நான்கு தந்திகளில் வில்லினையும் விரல்களையும் பயன்படுத்தி இசை எழுப்பப்படும்.
மேலைத்தேய, கீழைத்தேய இசைகளில் வயலின் தற்போது முக்கிய இடத்தை வகிக்கிறது. சங்கீதத்திற்கு “மாதா” போன்ற சுருதியை இனிமையாக தெளிவுபடுத்தி, இனிய நாதத்தை தருவது இக்கருவி என்றால் மிகையாகா. கலைஞர்களால் விரும்பிக் கற்கப்படும் கருவிகளில் இக்கருவியும் ஒன்றாகும்.
நன்றி
நிர்வாகம்
ஜேர்மன் தமிழர் ஒன்றிம்