பரதநாட்டியம்

பரதநாட்டியத்தின் புராண வரலாறு

நாட்டியத்தின் புராண வரலாறு தேவர்கள் அனைவரும் ஒன்றுகூடி  கைலாயத்திற்கு வந்த தங்களின் மனம் எப்போதும் ஏதே சஞ்சலத்தில் இருப்பதாக வும் உடலும் உள்ளமும் மகிழ்ந்திருக்க செய்ய வல்லமையுடைய ஏதேனும் ஒன்றை இறைவனாகிய சிவபெருமான் உருவாக்கித்தர வேண்டுமென்றும் கேட்கின்றார்கள். அவர் தமது கையில் இருந்த டமருகத்தினை அசைத்து ஒலி எமுப்புகிறார் அப்பொமுது உடுக்கையில் இருந்து  எமுந்த அந்த ஓங்கார ஓசையானது அங்கிருந்த அத்தனை தேவர்களின்  உள்ளத்திலும் ஒரு வித உற்சாகத்தினை தந்தது.

ஆடலுக்கு  அரசனான பரமசிவன் ஆட சடை ஆடியது, பிறை ஆடியது, குழை ஆடியது அரவம் ஆடியது அவனது மெல்லிய புருவம்  அசைய அதனால் அவன் பூசியிருந்த திருநீறும் அசைந்தது.  இனிமையான சலங்கையின் நாதம் கைலை எங்கும் ஒலித்தது. உண்மையாக, பிரம்மனும் கைதட்டி தாளம் போடலானான் இப்படி அமைந்த நாட்டியந்தான் உலகிலேயே முதன் முதலில் இடம் பெற்ற நாட்டியமாகும். சிவனின் ஆடலிலேயே அண்டங்கள் அசைந்தன. கோள்கள் தன்னிலையிலிருந்து திரிந்த, கடல்கள்  ஆர்ப்பரித்தது இதனால் தேவர்கள் அஞ்சி மகா தேவனின் தாங்கள் ஆடிய திருநாடனத்தினால் கடலும் , அண்டங்களும் கோள்களும் கலங்கிவிட்டன ஆதலால் தாங்கள் சாந்தமும், நளினமும் நிறைந்த நாட்டியத்தை எங்களுக்காக ஆடிக்காட்ட வேண் டும்  என கேட்டுக் கொ‌ண்டனர்.

டமருகத்தில் இருந்து தோன்றிய ஓங்கார ஒலி தனது ஆடலின் ருத்திரத்தையும் தோற்றியுள்ளது என்பதை உணர்ந்த இறைவன் அந்த டமருகத்தை இரண்டாக முறித்து பருத்த புறம் சேர்த்து சிறுத்தபுறம்தோல் போர்த்து மகாவிஷ்ணுவிடம் தந்தார். இதுவே மத்தளம் அல்லது மிருதங்கம் என்று பெயர் பெற்றது. மதுசூதனன் ஆகிய மகாவிஷ்ணு மத்தளம் கொட்டபிரம்மன் தாளம் போட பரமசிவன் ஆடிய ஆடல் பார்பதற்கு மிகவும் அழகாகவும், ரம்மியமாகவும் நளினம் மிகுந்தும் காணப்பட்டது. கொடி போல மகாதேவனின் இடை வளைந்து ஆடப்பெற்றதால் இதை தாண்டவம் என்றனர். முதலில் ஆடிய ஆடலில் ருத்திரம் அதிகம் இருந்ததால் ருத்திரதாண்டவம் என்று அழைக்கப்பட்டது. பார்வதியின் உள்ளத்திலும் தானும் ஆட வேண்டும் என்று ஆசை  தோன்றியது. பரமசிவனிடம் தனக்கும் அவர் ஆடுகின்ற ஒப்பற்ற நாட்டியத்தினை கற்றுத் தரும் படியாக பார்வதி   பரமசிவனும் பார்வதிக்கு அந்த நாட்டியத்தை கற்றுத்தர பார்வதிதேவி மிகவும் நளினமாக ஆடினார்.

சிவசக்தி நாட்டியத்தை கண்ணுற்ற தேவர்கள் சிவனிடம் இந்த உயர்வான நாட்டியங்களை உலகெங்கும் பரவ அருள்செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொண்ட னர். அதற்கு பரமசிவன் தான் ஆடிய ஆடலை தாண்டவம் என்றும் பார்வதி கற்றுத்தந்த நடனத்தை ‘லாஸ்சியம்’ என்றும் தேவர்களுக்கு கூறி அங்கிருந்த பரத முனிவருக்கு ஆடலின் நுட்பங்களை விபரித்து உபதேசித்தார் பரதமுனிவர் அதனைதன் சீடர்களுக்கு உபதேசிக்கும் பொருட்டு நாட்டிய சாஸ்திரம் என்ற நூலை எமுதினார் மகரிஷியின் சீடரான தண்டு என்கிற முனிவர் தாண்டவ நூலினை எமுதிஅருளினார்.

பார்வதி தனது தோழியும் வானாசூரனின் மகளுமான உஷை என்பவளுக்கு நாட்டியத்தின் கற்றுத்தர உஷை தேவலோக மாதர்களுக்கும் கந்தவர்லோக மாதர்களுக்கும் உத்தர தேசத்து மாந்தர்களுக்கும் கற்றுக் கொடுத்தார். அதேபோன்று பரதரிஷியின் பரதசாத்திரத்தை பயின்ற சீடர்கள் உலகெங்கும் பிரிந்து நாட்டியத்தை பரப்பினார்கள். பரத முனிவர் தன் சீடர்களுக்கு போதிக்கும் போது பராசக்தி படைத்த உலகமும் அண்டங்களும்  சரீராபினயம் ஆகவும் நான்கு வேதங்களை பதினொன் புரணங்கள் ஆறு சாஸ்திரங்கள் வாச்சிகாபினயமாகவும் ஒப்பற்ற திருநடனம் புரிகின்ற பரமசிவனே சாத்வீகாபினயம் ஆகவும் உள்ளார் என்று குறிப்பிடுகிறார்.

பரதமுனிவருக்கு ஈஸ்வரன் நந்திகேஸ்வரனைக் கொண்டு தாண்டவத்தினையும் பார்வதியைக் கொண்டு லாஸ்யத்தை கற்றுத் தருகிறார். இதனால் பரதரிஷி கம்பீரமும் வேகமும் முரட்டுத்தனமும் நிறைந்த தாண்டவம் ஆடவர்களுக்கு மட்டுமே ஏற்றதென்றும், மென்மையும் நளினமும் மிகுந்த லாஸ்யம் பெண்களுக்கு ஏற்றதென்றும் தனது பரத சாஷ்த்திரத்தில் கூறியுள்ளார்.

பிரம்மதேவன் வேதத்தினுள் ஆராய்ந்து நாட்டிய இலக்கணத்தை உருவாக்கினார்.  ரித்வேதத்தில் இருந்து வாச்சிகத்தினையும் யசூர்வேதத்திலிருந்து அபிநயனத்தையும், சாமவேதத்திலிருந்து காணம் என்கிறபாடலையும், அதர்வ வேதத்திலிருந்து ரஸபாவங்களையும் ஆகிய இவை நான்கினையும் ஒன்றறாகச் சேர்த்து உலகில் மேன்மையான கலையாக 32 இலட்ச விதிகள் கொண்ட நாட்டிய கலை இலக்கணத்தை வகுத்தார். பிரம்மன் அந்நூல் அறம்,பொருட்டு,  இன்பம், வீடு என்னும் நான்கு பேறுகளையும் தரும் என்று அலைமோதும் துக்கம், பயம்,சோகம்,வெறுப்பு என்னும் தீமைகளையும் என்றும் வேற்றுமைகளை நீக்கி வலிமையுள்ளஆனந்தத்தை தரும் என்று சொல்லி வாழ்த்தினார்.

நன்றி

நிர்வாகம்

ஜேர்மன் தமிழர் ஒன்றியம்