வாணி விழா ஒக்ரோபர் 2023
தலைநகர் பேர்லினில் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு நற்பணிகள் ஆற்றி அரச ரீதியில் வலுப்பெற்றிருக்கும் அமைப்பான ஜேர்மன் தமிழர் ஒன்றியத்தின் கீழ் இயங்கும் பேர்லின் தமிழாலயத்தின் 30 வது வாணிவிழா 24 ஒக்ரோபர் 2023 செவ்வாய்க்கிழமை மாலை அன்று மிகவும் பக்திபூர்வமாக கொண்டாடப்பட்டது. ஆரம்ப நிகழ்வுகளுடன் ஆரம்பமாகிய இவ்விழா மழலையர் நிலை, சிறுவர் நிலை மாணவர் நிகழ்வுகள், நடனங்கள், கவிதைகள், பண்ணிசை எனப் பல்வேறு நிகழ்வுகளால் அலங்கரிக்க, அனைத்து நிகழ்வுகளும் நவராத்திரி விரதத்தைச் சித்தரிப்பதாகவும், மாணவர்களின் சொல்லாட்சியை வளர்ப்பதாகவும் அணி சேர்த்தன.
மேலும் இவ்விழாவில் விருந்தோம்பலை மகிமைப்படுத்தும் வகையில் அறுசுவை உணவுகள் அவையோருக்கு வழங்கி மகிழ்விக்கப்படுத்தப்பட்டது. இறுதியாக பேர்லின் தமிழாலய வாணி விழா சிறப்பாக நடைபெறுவதற்கு எந்தவித பிரதிபலனும் கருதாமல் தமது ஒத்துழைப்புகளை நல்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி கூறியதோடு விழா இனிதே நிறைவேறியது. இத்தகைய விழாக்கள் மூலமே தொன்மையான எமது தமிழ்ப் பண்பாடு கலை கலாச்சரங்களை வளர்த்துக் கொள்ள முடியும். அந்த வகையில் நம் தாய்மொழியையும், கலைகளையும் மென்மேலும் வளர்ப்பதற்கு அனைவரும் உழைப்போமாக.
நன்றி.
தமிழால் தரணியில் இணைந்திடுவோம்