அரையாண்டுத் தேர்வு (சைவ நெறி) 2019/20
பேர்லின் தமிழாலயத்தின் 2019/20 கல்வியாண்டிற்கான சைவநெறித்தேர்வு 22 பெப்ரவரி 2020 சனிக்கிழமை அன்று தமிழாலய மண்டபத்தில் நடைபெற்றது. வளர்தமிழ் ஒன்று முதல் ஆண்டு பன்னிரண்டு வரையான மாணவர்கள் இத்தேர்வில் அமர்ந்து சைவநெறி ஆற்றலை திறமையாக வெளிப்படுத்தினர். இத்தேர்வானது தமிழாலய நிர்வாகத்தினரின் மேற்பார்வையின் கீழ் நேர்த்தியாக இடம்பெற்றது்.
சிவபெருமானை முழுமுதற்கடவுளாகக் கொண்டு ,வழிபடும் சமயம் சைவசமயம். இச்சமயநெறியில் வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை நீதிகளையும், ஒழுக்கங்களையும் விளத்தமாக கூறப்படுகிறது. அந்த வகையில் எமது தமிழாலயத்தில் தாய்மொழி தமிழுடன் சைவநெறியும் எமது தமிழாலய ஆசிரியர்களால் திறமையாக கற்பிக்கப்பட்டு வருவமை யாமறிந்ததே.
எனவே இத்தகைய தாய்மொழிப்பண்பாடுகள், சமயநெறிக்கோட்பாடுகளைப் பின்பற்றி, அதனூடாக ஒழுகுவதன் மூலமே, எதிர்காலத்தில்
நல்லதோர், இளைய குமூகாயத்தினரை
உருவாக்கலாம் என்பது கண்கூடு.
“வேதநெறி தழைத்தோங்க- மிகு சைவத் துறை விளங்குக”
நிர்வாகம்,
தமிழாலயம் பேர்லின்