வாணி விழா 2017
அத்துடன் கடந்த 2015/2016 கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வில் சிறப்புற்று சித்தியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.மேலும் 2016 ஆம் ஆண்டிற்கான தமிழ்த்திறன் போட்டியில் பங்குபற்றி தமது சிறப்புத் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
மேலும் இவ்விழாவில் விருந்தோம்பலை மகிமைப்படுத்தும் வகையில் அறுசுவை உணவுகள் அவையோருக்கு வழங்கி மகிழ்விக்கப்படுத்தப்பட்டது. இறுதியாக பேர்லின் தமிழாலய வாணி விழா சிறப்பாக நடைபெறுவதற்கு எந்தவித பிரதிபலனும் கருதாமல் தமது ஒத்துழைப்புகளை நல்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி கூறியதோடு விழா இனிதே நிறைவேறியது. இத்தகைய விழாக்கள் மூலமே தொன்மையான எமது தமிழ்ப் பண்பாடு கலை கலாச்சரங்களை வளர்த்துக் கொள்ள முடியும். அந்த வகையில் நம் தாய்மொழியையும், கலைகளையும் மென்மேலும் வளர்ப்பதற்கு அனைவரும் உழைப்போமாக!!
தமிழால் தரணியில் இணைந்திடுவோம்
நன்றி.