மாணவர்களிற்கான கற்கை நெறி செயற்திட்டம் 2017!!!
பேர்லின் வாழ் தமிழ் மாணவர்கள் வாழிட சமூகத்தினருடன் இணைந்து “இனவாதம்” எனும் கருப்பொருளைக் கொண்டு (30.01.-03.02.17) ஒரு வாரம் இரு பிரிவுகளாக இணைந்து ஆக்கபூர்வமான செயற்திட்டப் பட்டறையில் பங்காற்றினர். இச்செயற்திட்டத்தில் 40ற்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்கள் (14-18 அகவை நிரம்பியோர்) பங்குபற்றி, தமது பொது உளத் தன்மைகளை வெளிப்படுத்தினர்.
ஜேர்மன் தமிழர் ஒன்றியத்தின் பன்முக வளர்ச்சித் துறைகளில் ஒன்றான இச்செயற்திட்டம் தமிழ் மாணவர்களை பற்புலமை மிக்கவர்களாக மேம்படுத்தவென, கடந்த நான்கு வருடங்களாக (2014,2015,2016,2017) பல்வேறு கருப்பொருட்களைக் கொண்டு நடாத்தப்பட்டு வருகிறது.
இப் பட்டறையில் இதுவரை 160 ற்கும் அதிகமான இளந்தமிழ் மாணவர்கள் பங்குபற்றி வருவமை இங்கு பெருமைக்குரிய விடயமாகும். அத்துடன் இத் திட்டத்தில் செயலாற்றும் மாணவர்களை ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு அரசுசார் வலய முதல்வர்கள் அடங்கிய நிர்வாகத்தினரால் கௌரவிக்கப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருவமையும் குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்லாமல், இச்சான்றிதழ்கள் வாழிட மொழிக் கற்கை நெறிகளுக்கு மாணவர்களுக்கு பெரும் பயன்மிக்கதாகவும் உள்ளது.
எனவே இவ்வாறான செயற்திட்டங்களின் மூலமே, இளைய சந்ததியினர் பன்முக கலாச்சாரத்தின் மத்தியில் எமது மொழிக்கும், இனத்திற்கும், தேசத்திற்கும் சுதந்திரமான அங்கீகாரத்தைப் பெற்றுத்தர முடியும்.
“கடமையைச் செய் பலனை எதிர் பாராதே”
நன்றி
நிர்வாகம்
தமிழாலயம் பேர்லின்