மிருதங்கம்
இசைக்கருவிகளில் ஒன்றான தோற்கருவி வகையைச் சார்ந்தது மிருதங்கமாகும். தோற்கருவிகளை வாசித்து எழுப்பப்படும் இசையை ஆத்யாதம் எனவும் கூறப்படும்.
சங்கீதத்திற்கு முதுகெலும்பு போன்று இருப்பது லயம். இந்த லயத்தை வெளிப்படுத்துவது தாள வாத்தியங்கள் ஆகும்.
தாளவாத்தியங்களில் மிக முக்கியமான வாத்தியம் மிருதங்கம் என அழைக்கப்படும். தண்ணுமை வாத்தியம் ஆகும் மரத்தினாலும் தோலினாலும் இணைத்து உருவாக்கப்பட்ட வாத்தியம் இதுவாகும். மிருதங்கம் வாசிப்பவா் இரு கைகளினாலும், மணிக்கட்டுகளாலும், விரல் நுனிகளாலும் வாசிப்பா்.
இசை நிகழ்ச்சிகளில் தனி வாத்தியமாகவும், பக்க வாத்தியமாகவும் மிருதங்கத்தைப் பயன்படுத்துவா். இன்று இசைக்கச்சேரிகளில் முக்கிய பக்கவாத்தியமாக இவ்வாத்தியம் இடம் பெறுகிறது.
கீதம், வாத்தியம், நிருத்தியம் எனும் மூன்றையும் லயத்தினால் ஒருங்கிணைப்பது மிருதங்கக் கலையாகும்.