கர்நாடக சங்கீதம்

கர்நாடக சங்கீதம்

ஆயகலைகள் அறுபத்து நான்கிலும் செவிக்கு இன்பத்தைக் கொடுக்கும் கலை சங்கீதக்கலையாகும். இக்கலை கடவுளை நம்பிக்கையாக கொண்டதும், இறைவன் இசையால் வசமானது என்பதாலும், தெய்வீகக் கலை என்று கூறப்படுகிறது.

சங்கீதம் என்பது கீதம், வாத்தியம்,நிருத்தியம் எனும் முப்பிரிவுகளைக் கொண்டது. அவையாவன: – வாய்ப்பாட்டு இசை கீதமாகவும், இசைக்கருவிகளின் இசை வாத்தியமாகவும், நடனம் நிருத்தியமாகவும் அமைகிறது.

இராகம்,தாளம், ஸ்வரம் எனும் மூன்றும் ஒருங்கே அமைய இனிய இசை தோன்றும். அதுவே சங்கீதம். “ஓம்” எனும் ஒலியின் பிரதிபலிப்பே இசையாகும். எனவே இவ்விசைக்கு ஆதாரம் நாதமாகும். நாதத்தினின்று சுருதிகளும், சுருதிகளில் இருந்து ஸ்வரங்களும், ஸ்வரங்களில் இருந்து இராகங்களும் பிறக்கின்றன.

இச் சங்கீதக் கலையானது செவிக்கு இன்பத்தை அளிக்கும் அளவுடன் மட்டுமன்றி மாந்தரின் உள்ளத்தைப் பண்படுத்தக்கூடிய தன்மையுடையது. இதனால் இன்றைய உலகம் இசைக்கு அடிமையாகிவிட்டது. எமது பாரம்பரிய கலையான இன்னிசைச் சங்கீதம் மென்மேலும் பரிணாம வளர்ச்சி காண்ட்டும்.

“கீதம் வாத்யஞ்ச நிர்த்தியம்ச திரயம் சங்கீதம் உச்யதே”

நன்றி

நிர்வாகம்

ஜேர்மன் தமிழர் ஒன்றியம்