மாணவர்களிற்கான கற்கைநெறிச் செயற்திட்டம் 2019

By / 12. June 2024 / Allgemein / No Comments
மாணவர்களிற்கான கற்கைநெறிச் செயற்திட்டம் 2019

பேர்லின் வாழ் தமிழ் மாணவர்களின் பன்முக ஆற்றலை வாழிடமொழியூடாகவும் வெற்றி காண வேண்டும் எனும் நோக்குடன் ஜெர்மன் தமிழர் ஒன்றியத்தால் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்த விடயம்.

அந்த வகையில் வாழிட மொழி சார்ந்த அரச அமைப்புகளுடன் இணைந்து மாணவர் சார்ந்த கற்கை நெறிச் செயற்திட்டம்  ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமான கருப்பொருளைக்  கொண்டு ,கடந்த ஐந்து வருடங்களாக இடம்பெற்று வருகிறது. இதுவரை காலமும் இச்செயற்திட்டத்தில்  இருநூறிற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து தமது ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளனர்.  இதன் அடிப்படையில்  Vorbilder-Idole-Helden  எனும் கருப்பொருள் கொண்டு 15 ஏப்ரல் 2019 முதல் 19 ஏப்ரல் 2019 வரையான ஒரு வார விடுமுறை காலப்பகுதியில் Jugendfreizeithaus 117-121, 12109, Berlin எனுமிடத்தில்  மிகச் சிறப்பாக  பேர்லின் வாழ் தமிழ் மாணவர்கள் வாழிடமொழி சார்ந்தோருடன் இரு குழுக்களாக இணைந்து சிறப்பாக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

மேலும் தமிழ் குமுகாயத்தை அடையாளமாகக் கொண்ட நாம் , எமது மொழியையும் பண்பாட்டையும் பன்முகச் சூழலில் அறிமுகம் செய்ய வேண்டுமாயின் இத்தகைய திட்டங்களின் மூலமே மேம்படுத்தலாம். எனவே இவ்வாறான பல்வேறு முயற்சிகளில் மாணவர்கள் ஊக்கத்துடன் செயற்படுவதோடு, பெற்றோரும் உந்துசக்தியாக விளங்க வேண்டும். 

“கடமையைச்செய் பலனை எதிர்பாராதே”

நன்றி

தமிழால் தரணியில் இணைந்திடுவோம்

நிர்வாகம்
ஜேர்மன் தமிழர் ஒன்றியம்