வாணி விழா ஒக்ரோபர் 2018

By / 16. April 2024 / Integration, Religion, School / No Comments
வாணி விழா ஒக்ரோபர் 2018

எமது தமிழாலயத்தின் 25 வது வாணிவிழா 21 ஒக்ரோபர் 2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மிகவும் பக்திபூர்வமாக கொண்டாடப்பட்டது. ஆரம்ப நிகழ்வுகளுடன் ஆரம்பமாகிய இவ்விழா மழலையர் நிலை, சிறுவர் நிலை மாணவர் நிகழ்வுகள், நடனங்கள், கவிதைகள், நாடகம், கவியரங்கம், சகலகலாவல்லி மாலை ஓதல், வயலின் இசை, பண்ணிசை எனப் பல்வேறு நிகழ்வுகளால் அலங்கரிக்க, அனைத்து நிகழ்வுகளும் நவராத்திரி விரதத்தைச் சித்தரிப்பதாகவும், மாணவர்களின் சொல்லாட்சியை வளர்ப்பதாகவும் அணி சேர்த்தன.

அத்துடன் கடந்த 2016/2017 கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வில் சிறப்புற்று சித்தியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.மேலும் 2017 ஆம் ஆண்டிற்கான தமிழ்த்திறன் போட்டியில் பங்குபற்றி தமது சிறப்புத் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

மேலும் இவ்விழாவில் விருந்தோம்பலை மகிமைப்படுத்தும் வகையில் அறுசுவை உணவுகள் அவையோருக்கு வழங்கி மகிழ்விக்கப்படுத்தப்பட்டது. இறுதியாக பேர்லின் தமிழாலய வாணி விழா சிறப்பாக நடைபெறுவதற்கு எந்தவித பிரதிபலனும் கருதாமல் தமது ஒத்துழைப்புகளை நல்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி கூறியதோடு விழா இனிதே நிறைவேறியது. இத்தகைய விழாக்கள் மூலமே தொன்மையான எமது தமிழ்ப் பண்பாடு கலை கலாச்சரங்களை வளர்த்துக் கொள்ள முடியும். அந்த வகையில் நம் தாய்மொழியையும், கலைகளையும் மென்மேலும் வளர்ப்பதற்கு அனைவரும் உழைப்போமாக!!

நன்றி.

தமிழால் தரணியில் இணைந்திடுவோம்