வாணி விழா 2016

By / 4. March 2024 / Allgemein / No Comments
வாணி விழா 2016

தாவறுமுலகெலாந்தந்த நான் முகத்
தேவுதன்றணைவியாச் செறிந்த பல்லுயிர்
பூவுதொறிருந்திடு நலங்கொள்வாணிதன்
நாலடிமுடிமிசைப்புனைந்து போற்றுவாம்.

எனும் செய்யுளிற்கிணங்க பேர்லின் தமிழாலயத்தின் 24வது வாணிவிழாவானது 16.10.16 ஞாயிற்றுக்கிழமை அன்று மிகவும் பக்தி பூர்வமாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவானது ஆரம்ப நிகழ்வுகளுடன் ஆரம்பமாகி,சிறுவர் நிகழ்வுகள், நடனங்கள், நாடகங்கள், உரைகள், கவி அரங்கம், பட்டிமன்றம், மாணவர் பரிசளிப்புகள் எனத் தொடர்ந்து இறுதியாக நன்றியுரையுடன் இனிதே நிறைவேறியது.

இந்து சமய கொள்கைகளைப் பேணும் வகையில் கொண்டாடப்படுவன விழாக்களும், விரதங்களும். மனித வாழ்க்கைக்குத் தேவையான வீரம், செல்வம், கல்வி என்பவற்றை வழங்கும் மூன்று தெய்வங்கள் முறையே அலைமகள், மலைமகள், கலைமகளை நினைந்து வழிபடுவதற்காக அனுட்டிக்கப்படும் விரதம் நவராத்திரி விரதமாகும். இவ் விரதத்தினுள் கல்வியைத் தரும் கலைமகளை வேண்டி வழிபடும் விழா வாணிவிழா.

அந்த வகையில் எமது தமிழாலயத்தில் கல்வி பயிலும் மாணவச் செல்வங்கள் கல்வி, கலைகளில் சிறந்து விளங்கி, இந்து சமயக் கோட்பாடுகளைப் பின்பற்றி, அதன் வழி ஒழுகும் நோக்குடன் ஆண்டு தோறும் கொண்டாடப்படும் விழாக்களிலொன்று வாணி விழா. இத்தகைய விழாக்களின் மூலமே எமது பண்பாட்டு விழுமியங்கள் பேணப்படும் என்பது உள்ளார்ந்தமான விடயமாகும்.

“மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்”

நன்றி
நிர்வாகம்
தமிழாலயம்