விசைத்தட்டு

நவீன உலகில் இசைக்கலை பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது. இவ்வாறான மேலைத்தேய, கீழைத்தேய இசைக்கலைகளில் அதி உன்னத பங்கு வகிக்கிறது சுரத்தட்டு இசை. முன்னைய காலத்தில் “ஹார்மோனியம்” எனும் இசைக்கருவியின் புதிய மாற்றமே சுரத்தட்டு ஆகும்.

இக்கருவி இசைக்கச்சேரிகளில் பிரதான வாத்தியமாகவும், பக்க வாத்தியமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மின்சாரத்தின் உதவியுடன் இக்கருவியிலுள்ள சுரப்பலகையில் விரல்களினால், வாசிப்பதன் மூலம் இனிய ஓசை பிறக்கிறது. ஸ்வரங்களைத் துல்லியமாக வெளிப்படுத்தும் கருவிகளில் இதுவும் ஒன்றாகும். கச்சேரிகளில் இவ்விசை ஒலியால், அவையோரை எல்லாம் தன் வயமாக்கும் ஆற்றலுடைய கருவி.

தற்போது இதன் வடிவங்கள் பல்வேறு வகைகளில் உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்துவதால் இசைக்கலைஞர்கள் யாவரும் விரும்பி கற்கும் கலையாக இது அமைகிறது.
நன்றி

நிர்வாகம்
ஜேர்மன் தமிழர் ஒன்றிம்